நாளை முதல் போராட்டம்... வழக்கறிஞர் கூட்டமைப்பினர் அதிரடி அறிவிப்பு

இ-பைலிங் (மின்னணு முறை) முறையை நிறுத்தி வைக்ககோரி, போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

Update: 2024-04-07 15:45 GMT

மதுரை,

தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு ஜாக் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கூட்டமைப்பு தலைவர் நந்தகுமார், மாவட்ட விசாரணை நீதிமன்றங்களில் இ- பைலிங் (மின்னணு முறை) முறையை ஏப்ரல் 1 தேதி முதல் நீதித்துறை அமல்படுத்தி உள்ளதாக கூறினார்.

ஆனால் இ பைலிங் செய்வதற்கு கீழமை விசாரணை நீதிமன்றங்களில் எந்த கட்டமைப்பு வசதியும் செய்து தரவில்லை என்றும், இதனால் வழக்கு தாக்கல் செய்வதில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக கூறினார். இந்த சிக்கல் தீரும் வரை இ-பைலிங் முறையை நிறுத்தி வைக்ககோரி, நாளை முதல் 19-ம் தேதி வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

 

 

Tags:    

மேலும் செய்திகள்