காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பேரணாம்பட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேரணாம்பட்டு ஒன்றிய காங்கிரஸ் சார்பில் மொரசப்பல்லி கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எல்.ஐ.சி, ஸ்டேட் வங்கி மற்றும் பிற தேசியமய மாக்கப்பட்ட வங்கிகளை அதானி, அம்பானி குழுமங்களில் முதலீடு செய்ய நிர்பந்தித்தது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். பேரணாம்பட்டு தெற்கு ஒன்றிய தலைவர் சங்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜய பாபு, மாவட்ட பொது செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணாம்பட்டு கிழக்கு ஒன்றிய தலைவர் வழக்கறிஞர் செல்வகுமார் வரவேற்றார். மாவட்ட தலைவர் சுரேஷ் குமார் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். நாட்டாம் கார் அக்பர் விளக்கவுரையாற்றினார். ஆர்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் மனோகரன், பரஞ்சோதி, முனுசாமி, ஜலந்தர், கோவிந்தசாமி, வஜீர் அஹம்மத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட இலக்கிய அணி தலைவர் தினேஷ் குமார் நன்றி கூறினார்.