காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆற்காட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எல்.ஐ.சி. மற்றும் பொதுத்துறை வங்கிகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிர்பந்தம் செய்ததாக மத்திய அரசை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார். நகர தலைவர் பியாரேஜான், நிர்வாகிகள் வீரப்பா, அண்ணாதுரை, நந்தகுமார், பன்னீர்செல்வம் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் ஆனந்தன், வாசுதேவன், பார்த்தசாரதி, உதயகுமார், ஜாகிர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.