தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
விஷ சாராய மரணங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கண்டித்து அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.
சென்னை,
தமிழக்த்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் விஷ சாராயம் குடித்து 22 பேர் இறந்ததற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழக அரசை கண்டித்து தமிழக மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், மதுரை, சேலம், புதுக்கோட்டை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டங்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, செங்கோட்டையன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர். விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், கோவையில் எஸ்.பி.வேலுமணி, புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் இல்லாத இடங்களில் தாசில்தார் அலுவலகங்கள் அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது.