சேலத்தில் போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்
சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க கோட்ட தலைவர் செம்பான் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், ஒப்பந்த நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும், ஒப்பந்தப்படி கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் உதயகுமார், மண்டல பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பொருளாளர் சேகர், துணை பொதுச்செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.