ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-08-23 19:52 GMT

விருத்தாசலம், 

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படியை ஒன்றிய அரசு அறிவிக்கும் அதே தேதியில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அருணகிரி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் காசிலிங்கம், சுப்பிரமணியன் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தீனபந்து வரவேற்றார். மாநில துணை தலைவர் அண்ணாதுரை தொடக்க உரையாற்றினார். முன்னாள் மாநில தலைவர் மற்றும் சமூக ஆர்வலர் கலாமணி கண்டன உரையாற்றினார். இதில் மண்டல துணை தலைவர் கண்ணுசாமி, மத்திய மாநில செயற்குழு உறுப்பினர் செழியன், மாவட்ட தலைவர் சண்முகம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நாட்டுதுரை உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். முடிவில் மாவட்ட துணை தலைவர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்