விழுப்புரத்தில் மின்வாரிய ஓய்வுபெற்றோர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் மின்வாரிய ஓய்வுபெற்றோர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் சார்பில் விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வாரியம் பொதுத்துறையாக நீடிக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் தொடர வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படியை உடனுக்குடன் வழங்க வேண்டும், கருணை ஓய்வூதியத்தை ரூ.7,850-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் தங்க.அன்பழகன், கிளை செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர்.இதில் மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் பலர் கலந்துகொண்டனர். முடிவில் கிளை பொருளாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.