மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-01-10 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை வேங்கை வயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சவுரிராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆற்றலரசு, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொறியாளர் அணி துணைத்தலைவர் ரபிக், திராவிடர் கழக மாவட்ட தலைவர் சுப்பிரமணி, காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி., எஸ்.டி. துறைத்தலைவர் சேகர், நகர தலைவர் பாரிபாபு, மருதம் ஒருங்கிணைப்பாளர் ரவிகார்த்திக் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்