விருத்தாசலத்தில்மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம்,
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் வட்டார செயலாளர் அசோக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூர் கலவரத்துக்கு கண்டனம் தெரிவிப்பது, பிரதமர் மோடி அரசு பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வக்கீல் மோகன்ராஜ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி ராஜசங்கர் மற்றும் தனசேகர், பாலு, ஓலையூர் மணிமாறன் சரத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.