ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-20 19:21 GMT

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க விருதுநகர் மாவட்டக்கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் திருவண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் சிவபெருமான் தொடங்கி வைத்தார். பல்வேறு அரசு அலுவலக சங்க நிர்வாகிகள் பேசினர். மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதிய அமைப்புகளின் தமிழ் மாநில ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் சந்திரராஜன் நிறைவுரையாற்றினார். முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலைமை தொகை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது கடந்த ஓய்வூதியருக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் வட்டார தலைவர் ஜெகதீசன் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்