இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-10-15 18:45 GMT

ஊட்டி, 

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நீலகிரி மாவட்ட செயலாளர் யோகராஜ் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் சச்சின் முன்னிலை வகித்தார். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், இந்தியாவில் வாழும் மக்களில் 55 சதவீதம் பேருக்கு முதன்மை மொழி இந்தி அல்ல. இந்திய அரசியல் சட்டத்தின் படி இந்தி திணிப்பு எதிரானது. தேசத்தின் மொழி பன்முகத்தன்மை மீது இந்தி திணிப்பு என்பது தேசத்தின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் பல்வேறு தீமைகளை விளைவிக்கும். எனவே, அரசியல் சட்டத்தின் படி அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். இந்தி மொழியை மற்ற மாநிலங்கள் மீது திணிக்க கூடாது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்