வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 33-வது வார்டுக்கு உட்பட்ட கோவிந்த நகர் விரிவாக்க பகுதியான கிருஷ்ணா நகர் பகுதியில் குடிநீர், வாருகால், தெருவிளக்கு வசதி இல்லை. தெருக்களில் கழிவுநீர் தேங்குகிறது. இந்த கோரிக்கைகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகர் போலீசார், நகர்மன்ற உறுப்பினர் ஆகிேயார் பொதுமக்களிடம் வார்த்தை யில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர்.