நுகர்பொருள் வாணிபக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பேராவூரணியில் நுகர்பொருள் வாணிபக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-03-09 18:45 GMT

பேராவூரணி:

பேராவூரணியில் திறந்தவெளி சேமிப்பு கிடங்கு நிலையம் முன்பு நுகர்பொருள் வாணிபக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஐ.என்.டி.யூ.சி. தஞ்சை மண்டல தலைவர் சிவானந்தம் தலைமை தாங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகத்தை தனியார் மையமாக்க கூடாது. கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள மூட்டைகளை விரைந்து எடுக்க வேண்டும். இதனால் ஏற்படும் இழப்பை பணியாளர்கள் மீது சுமத்த கூடாது. சுமைப்பணி, துப்புரவுபணி டெண்டர் முறையை கைவிட வேண்டும். நவீன அரிசி ஆலைகளை தனியாருக்கு விட கூடாது. ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்