புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சிறுமங்கலம் ஊராட்சிக்கு அடிப்படை வசதி செய்யக்கோரி மண்பானைகளை உடைத்து போராட்டம்
புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சிறுமங்கலம் ஊராட்சிக்கு அடிப்படை வசதி செய்யக்கோரி மண்பானைகளை உடைத்து போராட்டம் நடந்தது.
ராமநத்தம்,
வேப்பூர் அருகே உள்ள சிறுமங்களம் ஊராட்சியில் குடிநீர், வடிகால், சிமெண்டு சாலை, மயான பாதை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பானை உடைக்கும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு வட்ட தலைவர் மும்மூர்த்தி தலைமை தாங்கினார். கிளை செயலாளர் மரகதம், கிளை துணை செயலாளர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கோகுலகிளி ஸ்டீபன் கலந்து கொண்டு அடிப்படை வசதிகள் செய்து தரவலியுறுத்தி பேசினார். முன்னதாக சிறுமங்கலம் கிராம பெண்கள், கட்சியினர் நல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து தலையில் மண் பாணைகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மண்பாைனகளை கீழே போட்டு உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைபார்த்த வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். இதனை ஏற்ற கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதில் நிர்வாகிகள் பாண்டியன், பானுமதி, மணிவேல், செந்தில் குமார், மணிவேல், ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.