பட்டா கேட்டு தாலுகா அலுவலகத்தில் போராட்டம்
பட்டா கேட்டு தாலுகா அலுவலகத்தில் போராட்டம் செய்தனர்.
சிவகாசி
சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட விஸ்வநத்தம் பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த 60 பெண்கள் நேற்று தாலுகா அலுவலகம் வந்து கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதியில் வசித்து வருவதாகவும், தங்களுக்கு அரசு சார்பில் இலவச பட்டா வழங்க வேண்டும் என்று கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அதிகாரிகளிடம் இலவச பட்டாவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்தனர். மனுக்களை பெற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.