சுங்க கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு: லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சுங்க கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது

Update: 2023-03-27 20:57 GMT


மதுரை லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சாத்தையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் சுமார் 27 சுங்கச்சாவடிகளுக்கு 5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை அனைத்து வாகனங்களுக்கும் கட்டணத்தை உயர்த்த உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் காலாவதியான 7 சுங்கச்சாவடிகளை அகற்றாமல் இன்று வரை வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலித்து வருகின்றனர். வாகனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டுக்கு 15 சதவீதம் கூடியிருந்தால் கட்டண உயர்வு இருக்கக் கூடாது என்ற விதி மீறப்படுகிறது. சுங்கச்சாவடிகளில் ஓட்டுனர்களுக்கு உள்ள கழிப்பறை, குளியல் அறைகள் சரிவர பராமரிக்கப்படவில்லை. இந்த காரணங்களுக்காக மதுரையை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சார்பில் வருகிற 1-ந்தேதி காலை கப்பலூர் சுங்கச்சாவடி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்