கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு எதிர்ப்பு: கறம்பக்குடியில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கறம்பக்குடியில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-05 18:49 GMT

கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் கறம்பக்குடியில் முஸ்லிம்கள் சார்பில் கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்