பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பழனி நகர, ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பழனி வேல் ரவுண்டானா பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருள்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மணிப்பூர் மாநிலத்தில் கலவர நிலையை கட்டுப்படுத்தாமல் மத்திய அரசு உள்ளதாகவும், அதை கட்டுப்படுத்த கோரியும், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கம்யூனிஸ்டு கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டு, மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.