ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-16 21:00 GMT

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சிலம்பரசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், திருச்சி அருகே காட்டூர் அம்மாகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தவர்களை தட்டிக்கேட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இந்த கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், போதைபொருள் விற்பனையை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பாலாஜி, நகர செயலாளர் பிரேம்குமார், மாணவர் சங்க மாவட்ட தலைவர் முகேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்