தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2023-05-02 21:00 GMT

இந்து எழுச்சி முன்னணி மற்றும் வடுகபட்டி பாட்டையா கோவில் நிர்வாகத்தினர் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடுகபட்டி பாட்டையா கோவிலுக்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு கோவில் நிர்வாக தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, கோவில் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கோரிக்கை தொடர்பான மனுவை கலெக்டர் ஷஜீவனாவிடம் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்