ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து வீரசைவ பேரவையினர் ஆர்ப்பாட்டம்
ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து தேனியில் வீரசைவ பேரவையினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேனி மாவட்ட வீர சைவ பேரவை சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஸ்ரீபெரும்புதூரில் நடந்த கூட்டத்தில் தங்கள் சமுதாயம் குறித்து ஆ.ராசா எம்.பி. இழிவாக பேசியதாகவும், அவரை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு பேரவையின் மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது ஆ.ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.