நாமக்கல்:
நில அளவை துறையில் கள அலுவலர்களின் பணி சுமையை கருத்தில் கொள்ளாமல், நில அளவர் முதல் உயர்நிலை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் திட்ட இயக்குனரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். துணை தலைவர் சசிகலா வரவேற்று பேசினார். மாவட்ட இணை செயலாளர் சுபாஷ் வெங்கடேஷ், கோட்ட கிளை தலைவர்கள் தனசேகரன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செந்தில்குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், இணை செயலாளர் இளங்கோவன் மற்றும் நில அளவை பணியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர்.