வேடசந்தூரில் குடகனாறு பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேடசந்தூரில் குடகனாறு பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-07 20:45 GMT

குடகனாறு பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், வேடசந்தூர் ஆத்துமேட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆத்தூர் தாலுகா நரசிங்கபுரம் ராஜவாய்க்காலில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை இடித்துவிட்டு, குடகனாற்றில் தண்ணீரை திருப்பிவிட வேண்டும். குடகனாறு வல்லுனர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும். குடகனாற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். குடகனாறு அணையில் மொத்த கொள்ளளவான 27 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும்.

அணையில் இருந்து தண்ணீரை ஆற்றில் திறந்துவிட்டு வீணாக்காமல் பாசன வாய்க்கால்களில் திறந்துவிட்டு, கிராம பகுதிகளில் உள்ள அனைத்து குளங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், குடகனாறு பாதுகாப்பு சங்கத்தினர், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், குஜிலியம்பாறை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சங்கத்தினர், குஜிலியம்பாறை மல்லபுரம் முயற்சி கிராம மேம்பாட்டு சங்கத்தினர், வானம்பாடி பசுமை இயக்கத்தினர், வெள்ளோடு வருத்தமில்லா வாலிபர் சங்கத்தினர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்