திண்டுக்கல்லில் புரட்சிகர சோசலிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வை தடுக்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் புரட்சிகர சோசலிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
புரட்சிகர சோசலிஸ்டு கட்சி சார்பில் திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர செயலாளர் பொன்னுச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தங்கபெருமாள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால், விலைவாசி உயர்ந்து வருகிறது.
ஏழை-எளிய மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை தடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். தமிழ்நாட்டில் படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.