முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு: தர்மபுரியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்-முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடந்தது
தர்மபுரி:
மதுரை விமான நிலையத்தில் நடந்த தகராறு தொடர்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் நேற்றுஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் கே.சிங்காரம், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், பொருளாளர் நல்லதம்பி, இணை செயலாளர் செல்வி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்க்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறி தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநில இளைஞர் பாசறை இணை செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் நீலாபுரம் செல்வம், சிவப்பிரகாசம், பழனி, வேலுமணி, கோபால், செல்வராஜ், மதிவாணன், விஸ்வநாதன், பசுபதி, மகாலிங்கம், செல்வம், சேகர், தனபால், செந்தில்குமார், முருகன், அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி கவுன்சிலர் தேவா செந்தில்வேல் நன்றி கூறினார்.