நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-02-24 20:30 GMT

நிலக்கோட்டை வைகை பாசனமடை சங்க தேர்தல், வருகிற 12-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக நேற்று முதல் வருகிற 2-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று பொதுப்பணித்துறையினர் அறிவித்து இருந்தனர். இந்தநிலையில் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல், வேட்பு மனுக்களை நேற்று மாலை 4 மணி வரை அதிகாரிகள் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் தேர்தலில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து, நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் நல்லதம்பி தலைமையில் வைகை பாசனமடை சங்க வாக்காளர்கள், விவசாயிகள் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரும், நிலக்கோட்டை தாசில்தாருமான தனுஷ்கோடியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் தேர்தலை முறையாக நடத்த வேண்டும். வைகை பாசனமடை சங்க வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்