தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி (எம்.எல்.) சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதால் அதை திருப்பி அனுப்பி விட்டு தரமான அரிசி வழங்க வேண்டும். பஞ்சமி நிலம், பூமிதான நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு உரிய மக்களிடம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அவர்கள் கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.