எலச்சிபாளையத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-12-15 18:45 GMT

எலச்சிபாளையம்:

எலச்சிபாளையம் வட்டார அலுவலகம் முன்பு பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சின்ன மணலி ஊராட்சியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றிய தலைவர் சங்கர், மாவட்ட துணைத்தலைவர் ஈஸ்வரன், மாநில பொருளாதார பிரிவு துணைத்தலைவர் பழனியப்பன், ஒன்றிய மகளிர் அணி தலைவர் சத்யா, ஒன்றிய தலைவர் தனுஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்