அ.தி.மு.க. சார்பில் 10 இடங்களில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் 10 இடங்களில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், சொத்து வரி, வீட்டு வரி, கடை வரி, மின் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கண்டித்தும் தர்மபுரி மாவட்டத்தில் 10 இடங்களில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
தர்மபுரி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், ஒன்றிய செயலாளர்கள், நீலாபுரம் செல்வம், சிவப்பிரகாசம், நகர செயலாளர் பூக்கடை ரவி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தகடூர் விஜயன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் உலக மாதேஷ் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
நல்லம்பள்ளி
நல்லம்பள்ளி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் வரவேற்று பேசினார். பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், வக்கீல் அணி நிர்வாகி அசோக்குமார், நகர செயலாளர் பூக்கடை ரவி, முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் கிருஷ்ணசாமி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மின் கட்டண உயர்வை கண்டித்தும், சொத்து வரி உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றிய நிர்வாகிகள் சுப்பிரமணி, மாணிக்கம், ஜோசப், பழனி, திருமால் வர்மா, சக்தி, ரங்கன், நடராஜன், கேசவன், விஜயன், வேடி, கணேசன், மாது, பிரேம்குமார், மூர்த்தி, கோபாலகிருஷ்ணன், முனிராஜ், தனபால், ஆறுமுகம், மச்சக்கருப்பன், கண்ணியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி நன்றி கூறினார்.
கடத்தூர்
இதேபோல் கடத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சிந்தல்பாடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் தலைமை தாங்கினார்.
கிழக்கு செயலாளர் மதிவாணன் வரவேற்று பேசினார். மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் துரை, ஒன்றிய துணைச் செயலாளர் ரவீந்திரன், ஒன்றிய குழு தலைவர் உதயா மோகனசுந்தரம் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பாப்பிரெட்டிப்பட்டி
இதேபோன்று பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பையர்நத்தம் பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. குப்புசாமி, ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், சேகர், நீலாபுரம் செல்வம், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, நகர செயலாளர்கள் ராஜா, தென்னரசு, நிர்வாகிகள் பெரியகண்ணு, தமிழ்மணி, வஜ்ஜிரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மொரப்பூர், பாலக்கோடு
மொரப்பூரில் நடந்த ஆர்பாட்டத்திற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் கே.சிங்காரம் தலைமை தாங்கினார். அரூர் எம்.எல்.ஏ. வே.சம்பத்குமார், மொரப்பூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வம், மேற்கு ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், கம்பைநல்லூர் நகர செயலாளர் தனபால், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பிரதிநிதி சென்னையன் வரவேற்றார். இதில் மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் உறுப்பினர் முருகன், கூட்டுறவு சங்க தலைவர்கள் பழனிவேல், சிங்காரம், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் அன்சர், கம்பைநல்லூர் பேரூராட்சி கவுன்சிலர் சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர் கோமதி செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் கவிதா செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் அமானுல்லா நன்றி கூறினார்.
பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் அவைத் தலைவர் தொ.மு.நாகராசன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கீல் செந்தில், நகர செயலாளர் ராஜா, மாரண்டஅள்ளி நகர செயலாளர் கோவிந்தன், தகவல் தொழில்நுட்ப ஒன்றிய செயலாளர் ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. மாதப்பன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், மாவட்ட கவுன்சிலர் சரவணன், அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பென்னாகரம்
பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில விவசாய அணி தலைவர் டி.ஆர்.அன்பழகன் தலைமை தாங்கினார். பென்னாகரம் தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பு வரவேற்றார். பென்னாகரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வேலுமணி, பேரூர் செயலாளர் சுப்பிரமணியன், கூட்டுறவு சங்க தலைவர் பி.ஏ.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.