தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சட்ட மேதை அம்பேத்கருக்கு காவி, விபூதி மற்றும் குங்குமம் பூசியவர்களை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் ஜெயந்தி, ஜானகிராமன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட துணை செயலாளர் மின்னல் சக்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன், மாவட்ட பொருளாளர் மன்னன், மாநில நிர்வாகிகள் பாரதிராஜா, அதியமான், கிள்ளிவளவன், சட்டமன்ற தொகுதி செயலாளர் சாக்கன்சர்மா, நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கோட்டை கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தர்மபுரி சட்டமன்ற தொகுதி செயலாளர் சமத்துவன் வரவேற்றார். தர்மபுரி மாவட்ட மேலிட பொறுப்பாளர் பாவேந்தன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அம்பேத்கருக்கு சாதி, மத சாயம் பூசுபவர்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் ராமன், பவுத்தபெருமாள், சிவஞானம், கருப்பண்ணன், தமிழ் அன்வர், அம்பேத் வளவன், முத்துகுமரன், தகடூர் கரிகாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.