தர்மபுரியில் த.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-12-06 18:45 GMT

தர்மபுரி:

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுபேதார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்துல் சுக்கூர், பொருளாளர் இதயத்துல்லா, துணைத் தலைவர் நியாஸ், துணை செயலாளர் பைரோஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இலியாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் சலீம், யூசுப் ஜான், அஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

த.ம.மு.க. தலைமை கழக பேச்சாளர் ரெக்ஸ் ரபீக், தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன், மாவட்ட தலைவர் சிவாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குமார், விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல அமைப்பு செயலாளர் நந்தன், மாவட்ட செயலாளர் ஜெயந்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அன்வர் பாஷா ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அடிப்படை உரிமையான வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான முஸ்லிம்கள், பெண்கள் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி நகர தலைவர் சாதிக் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்