வாக்காளர் அடையாள அட்டையுடன் பொதுமக்கள் தர்ணா

வாக்காளர் அடையாள அட்டையுடன் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-03 19:00 GMT

மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி மதகடி பஸ் நிறுத்தத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவருடைய உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தியபோது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த ஆண்டும் வருகிற 6-ந் தேதி பிரச்சினைக்குரிய இடத்தில் அம்பேத்கர் நினைவு நாளில் அவரது படம் வைத்து கூட்டம் கூடாமல் நிகழ்ச்சி நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று பட்டவர்த்தி, நடராஜபுரம், தலைஞாயிறு, ஆதமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தங்கள் பகுதியில் அம்பேத்கர் படம் வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நிகழ்ச்சி நடத்தினால் இருதரப்பு மோதல் ஏற்படும் என்றும், இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லை எனில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை திருப்பி ஒப்படைப்பதாக கூறி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்