பெரியகுளத்தில் மதுபான பாரை மூடக்கோரி சாலை மறியல்

பெரியகுளத்தில் மதுபான பாரை மூடக்கோரி முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-30 17:29 GMT

பெரியகுளம் வடகரையில் உள்ள புதிய பஸ் நிலையம் எதிரே புதிதாக தனியார் மதுபான பார் திறக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் நேற்று புதிய பஸ் நிலையம் அருகே கூடினர். பின்னர் திடீரென்று அவர்கள் மதுபான பாரை முற்றுகையிட்டனர். அதைத்தொடர்ந்து மதுபான பாரை மூடக்கோரி அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து மறியலை கைவிட்டு முஸ்லிம்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரியகுளத்தில் 3 தனியார் மதுபான பார்கள் செயல்பட்டு வருகின்றன. இதனை நிரந்தரமாக மூடக்கோரி பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மேலும் ஒரு மதுபான பார் திறக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்