அரியகுளத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-11-16 18:45 GMT

தர்மபுரி:

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் ஆவின் பால் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், இவற்றை தமிழக அரசு உடனே ரத்து செய்ய வலியுறுத்தியும் தர்மபுரி வடக்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் அரியகுளத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் கிருத்திகா, பரமானந்தம், விமலா, கந்தசாமி, வினோத், அருள், முருகன், சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பாஸ்கர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சஞ்சய்காந்தி, பரசுராமன், முனியப்பன், பழனிசாமி, கோவிந்தசாமி, வேடி, சங்கர், சக்திவேல், ராதா, விஸ்வநாதன், விக்னேஷ், கனகா, அருண்குமார், வசந்தகுமார் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்