திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-08 16:17 GMT

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் முபாரக்அலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விவேகானந்தன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் ஜெசி, மாநகராட்சி-நகராட்சி அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு வழங்கிய 4 சதவீத அகவிலைப்படி மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும். தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்