சின்னாளப்பட்டியில் இந்து மக்கள் கட்சியினர் தர்ணா

சின்னாளப்பட்டியில் இந்து மக்கள் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-30 16:09 GMT

தேவர் ஜெயந்தியையொட்டி சின்னாளப்பட்டியில் உள்ள தேவர் சிலைக்கு இன்று பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் மதியம் இந்து மக்கள் கட்சியினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கோவையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும் கோஷம் எழுப்பினர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போராட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்