தேனியில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தேனியில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-17 17:12 GMT

தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில இளம்புலிகள் அணி செயலாளர் தலித்ராயன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் ஆண்டிப்பட்டி அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

லட்சுமிபுரம் கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கலெக்டர் முரளிதரனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், "லட்சுமிபுரம் கிராமம் திம்மரசநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்டது. ஆனால், எங்களின் வாக்காளர் பட்டியலில் ரெங்கசமுத்திரம் ஊராட்சி என்று உள்ளது.

இதனால் எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் உள்ளது. எனவே, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை திம்மரசநாயக்கனூர் ஊராட்சிக்கு மாற்ற வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்