தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து சிவசேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-09-29 18:45 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டையில் சிவசேனா அமைப்பு சார்பில் இந்துக்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில அமைப்பு செயலாளர் முரளி மோகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா, இந்து முன்னணி நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சிவசேனா அமைப்பினர் திரளாக கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்