வழிப்பாதை அமைத்து தரக்கோரி கருப்புக்கொடியுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-09-29 18:45 GMT

மத்தூர்:

ஊத்தங்கரை அருகே உள்ள வாணிப்பட்டி ஊராட்சி ரெட்டிப்பட்டி கிராம பொதுமக்கள் தனியாருக்கு சொந்தமான நிலத்தை வழிப்பாதையாக பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் அந்த வழிப்பாதையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் வழிப்பாதை அமைத்து தரக்கோரி ரெட்டிப்பட்டி கிராம மக்கள் அங்குள்ள கிராம நிர்வாகம் அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை தாசில்தார் கோவிந்தராஜ், கல்லாவி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கவி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தன்ர. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்