ஓசூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஓசூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-09-18 16:49 GMT

ஓசூர்:

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஓசூரில் இந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராம்நகர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முருகன், செயலாளர்கள் சீனிவாசன், பிரவீன்குமார் மற்றும் நிர்வாகிகள் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு ஆ.ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்