நாமக்கல்லில் மின்வாரிய ஓய்வுபெற்ற நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் மின்வாரிய ஓய்வுபெற்ற நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-08-23 18:28 GMT

நாமக்கல்:

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மத்திய அரசு மின்சார சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் சின்னுசாமி தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் காளியப்பன் தொடங்கி வைத்து பேசினார்.

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் குப்புசாமி, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வேலுசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் நிபந்தனைகளை அகற்றி அனைத்து மருத்துவ செலவுகளையும் காப்பீடு நிறுவனமே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 சதவீதம் அகவிலைப்படியை கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்