அடிப்படை வசதி கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்

அடிப்படை வசதி கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்

Update: 2022-08-15 17:54 GMT

பள்ளிபாளையம்:

வெப்படை அருகே ரங்கனூர் பகுதியில் உள்ள அருந்ததியர் காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை நடவடிக்கை எடுக்காததால் நேற்று அருந்ததியர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் தாசில்தார் தமிழரசி அங்கு சென்று பொதுமக்களுடன் சமாதானம் பேசி உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என கூறியதன்பேரில் கருப்புக்கொடி அவிழ்க்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்