அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்

அஞ்சல் ஊழியர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-08-10 18:01 GMT

காரைக்குடி,

இந்திய அஞ்சல் துறையை தனியார் மயமாக்கும் முடிவை எதிர்த்தும், 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. காரைக்குடி கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக காரைக்குடி தலைமை அஞ்சலகத்தின் முன்பு அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்குடி கோட்ட செயலாளர்கள் காளிதாஸ், தர்மலிங்கம் தலைமை தாங்கினர். வெங்கடேசன், ஆறுமுகம், ராஜகோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் சேது அரசன் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்