பரமத்திக்குள் செல்லாத தனியார் பஸ் சிறைபிடிப்பு

பரமத்திக்குள் செல்லாத தனியார் பஸ் சிறைபிடிக்கப்பட்டது.

Update: 2022-07-28 18:02 GMT

பரமத்திவேலூர்:

சேலத்தில் இருந்து கரூர் செல்லும் சில தனியார் பஸ்களும், சேலத்தில் இருந்து திண்டுக்கல் மற்றும் மதுரை செல்லும் சில அரசு பஸ்களும், அதேபோல் மதுரையில் இருந்து சேலம் மற்றும் நாமக்கல் செல்லும் சில பஸ்களும் பரமத்திக்குள் செல்லாமல் கரூர்-நாமக்கல் நெடுஞ்சாலையிலேயே சென்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று இரவு பரமத்திவேலூரில் இருந்து சேலத்துக்கு புறப்பட்ட ஒரு தனியார் பஸ்சில் பயணி ஒருவர் பரமத்திக்கு டிக்கட் கேட்டுள்ளார் .ஆனால் தனியார் பஸ்சின் நடத்துனர் பரமத்திக்குள் பஸ் செல்லாது என கூறியுள்ளார். இதனால் அந்த பயணிக்கும், தனியார் பஸ் நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே டிரைவர் பஸ்சை பரமத்தி ஊருக்குள் ஓட்டி சென்றார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்செங்கோடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த பரமத்தி போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். பின்னர் பஸ்கள் முறையாக பரமத்திக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்