ராமேசுவரம் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்
ராமேசுவரம்கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமேசுவரம்,
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேசுவரத்தில் அந்தோணியார் கோவில் எதிரே நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், காரல் மார்க்ஸ், காளிதாஸ், நந்தகிருஷ்ணன், காளிமுத்து உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் மீனவர்களும் கலந்துகொண்டனர்.