குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-07-06 16:42 GMT

குமாரபாளையம்,

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்கள் அனைவரையும் போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனை கண்டித்து நேற்று மாலை குமாரபாளையத்தில் பள்ளிபாளையம் பிரிவு ரோட்டில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்க நகர தலைவர் பராசக்தி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட அமைப்பாளர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சக்திவேல் மற்றும் காந்தி, சரவணன், ஆறுமுகம், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்