பசும்பொன் தேசிய கழகம் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் பசும்பொன் தேசிய கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2022-07-04 14:34 GMT

தென்காசி மாவட்ட பசும்பொன் தேசிய கழகம் சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் துரை தேவன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தலைவர் ஜோதி முத்துராமலிங்க தேவர் கலந்து கொண்டு பேசினார்.

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்ததை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கட்சி இருக்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில செயல் தலைவர் சுப.கண்ணன், இணை பொது செயலாளர் முருகன், துணைத்தலைவர் பாலு, இளைஞர் அணி தலைவர் பாண்டி, இளைஞர் அணி செயலாளர் மாடசாமி, தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன், கேரள மாநில செயலாளர் பூதப்பாண்டி, மாவட்ட இணை செயலாளர் சுரேஷ், மாவட்ட இளைஞரணி தலைவர் பாண்டியன், தொலைத் தொடர்பு தலைவர் இசக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்