த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
நாகையில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளிப்பாளையம்:
நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நாகை அவுரித்திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜபருல்லா தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சி மாநில விவசாய அணி செயலாளர் இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர் ராயல் ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மனிதநேய மக்கள் கட்சி கல்லார் ரபீக் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.