பெரிய மணலியில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெரிய மணலியில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருகே பெரியமணலியில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய தலைவர் அன்புமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி, எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.