எலச்சிபாளையத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
எலச்சிபாளையத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாதர் சங்க ஒன்றிய தலைவர் சத்தியா தலைமை தாங்கினார். பொருளாளர் பழனியம்மாள் முன்னிலை வகித்தார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் அலமேலு கோரிக்கைகளை விளக்கி பேசினார். பால் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் ரங்கசாமி, எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், சி.ஐ.டி.யு. தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தகுதியானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அரிசி அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து வருவாய் அலுவலகத்தில் இருந்த ஆய்வாளர் லட்சுமணனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.